10,000-இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்............. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

10,000-இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்.............

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10,000-இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 10,155 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இவர்களில் அதிகூடிய தொகையாக 2,975 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 2,215 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 891 பேரும் களுத்துறையில் 572 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.



About UPDATE